தென்காசி மாவட்டம்-கடையநல்லூரில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பொது உறுப்பினர்கள் கூட்டம் துர்கா மஹாலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா. செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டியும் மாவட்ட, நகர, ஒன்றிய கழகப் பொறுப்புகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் திமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களில் இளைஞர்களை அதிகமாக கழகத்தில் இணைக்க வேண்டி பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் செல்லத்துரை, நகரச் செயலாளர் எஸ். அப்பாஸ், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் பா. ராஜா, நகர்மன்றத் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், புளியங்குடி நகரச் செயலாளர் எ. அந்தோணிசாமி, ஆய்க்குடி சேர்மன் சுந்தர்ராஜன், வடகரை சேக் தாவுது, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், யூனியன் துணைத் தலைவர் ஐவேந்திரன் தினேஷ், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் லாலா சங்கர பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் முருகன், முகைதீன் கனி, மூவன்னா மசூது, பொறியாளர் அணி கருப்பண்ணன், நல்லையா, காளிமுத்து, உமா மகேஸ்வரி, காந்திமதி, கவிதா மாரியப்பன், மாரிச்செல்வம், கார்த்திக், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், அவைத் தலைவர் வேலுச்சாமி பாண்டியன், மஜித், மைதீன், வகாப், முத்துக்குமார் தேன்பொத்தை முருகேசன், சுதாகர், இசக்கி ராஜ், முருகன், திருப்பதி, சாமி, செங்கோட்டை நகரச் செயலாளர் ரஹீம், வேலுச்சாமி, பாப்பா, பரமசிவம், சாம்பூர் வடகரை மாறன், ராமச்சந்திரன், சிங்கிலி பட்டிஆ. மணிகண்டன், 13 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திவான் மைதீன், நகரத் துணைச் செயலாளர் காசி, இத்தாலியன் பீரப்பா, வாசுதேவநல்லூர் யூனியன் துணைத் தலைவர் சந்திரமோகன், மாரிக்கனி, ஆசைக்கனி, திரிகூபுரம் தங்கப்பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 48 = 58