தென்காசி மாவட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கு பொருட்கள், திண்பண்டம் வழங்க மறுப்பு: குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை தென் மண்டலா ஐ.ஜி. நடவடிக்கை

பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை  சில காலத்த்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் தென் மண்டலா ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றம்புரிவோரை சில காலத்த்திற்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்றும் சட்டப்பிரிவில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − = 70