தென்காசி மாவட்டத்தில் இன்று முதல்  144 தடை உத்தரவு

தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் 19-ம் தேதி இன்று காலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு, என மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2