தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, தென்காசி வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் ரஃபீக் வரவேற்புரை ஆற்றினார். நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், மஞ்சுளா, பூமாதேவி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசன், காஜா மைதீன், இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ், வைகை குமார், சலீம், ஆறுமுகம், கோவிந்தன், கண்ணன், சபரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி நகர காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சான்றிதழை தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, மாவட்ட துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன், முன்னாள் சேர்மன் சட்டநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சித்திக், தேவராஜன், கதிர்வேல், வெங்கடாசலம்,மற்றும் 33 வார்டு தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை சிவாஜி மன்ற கணேசன் தொகுத்து வழங்கினார். முடிவில் நகர பொருளாளர் ஈஸ்வரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.