தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுபள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மூன்று மாவட்டத்தில் இருந்து 23 பள்ளிகள் கலந்து கொண்டனர், இப்போட்டியை பள்ளியின் முதல்வர் மோனிகா டி சோஷா துவக்கி வைத்தார். இப்போட்டியின் இறுதியில் தென்காசி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் மைதீன், மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டு டோனாவூர் சந்தோஷ் வித்யாலயா முதலிடமும், தூத்துக்குடி புனித மைக்கேல் பள்ளி இரண்டாமிடமும், தென்காசி நியூ கேலக்ஸ், நெல்லை பெல் ஸ்கூல் ஆகிய பள்ளிகள் மூன்றாவது இடத்தை பிடித்தது, வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்ஜான் கால்பந்து கோப்பையையும், பரிசுகளையும் மாணவர்களுக்கு வழங்கினர். இந் நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன், ஸ்டீபன், மகாலட்சுமி, சோபியா, வைஷ்ணவி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.