தென்காசி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயற்கை மருத்துவமுறை சிகிச்சை முகாம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 5வது தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நேற்று அனைத்து அரசு அலுவலர்களுக்காக சிறப்பு இயற்கை மருத்துவமுறை சிகிச்சை முகாம் எஸ்.தங்கப்பழம் மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்றது.

இம்முகாமை இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் பிரேமலதா மற்றும் கூடுதல் பொறுப்பு இணை இயக்குநர் (ஆயுஸ்) டாக்டர் உஷா ஆகியோர் துவக்கி வைத்தனர். இயற்கை மருத்துவத்தை பற்றிய முறைகள் மற்றும் உணவு பழக்க வழக்கம் பாரம்பரிய வைத்திய முறை பற்றிய குறிப்புகளையும் அலுவலர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

எஸ்.தங்கப்பழம் யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி டாக்டர் பாரதி (உதவி முதல்வர்), உடல்நலம் பேணுவது மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறை, பயிற்சிகள் குறித்த தகவல்களை வழங்கினார் . அரசு அலுவலர்களுக்கு உரிய பரிசோதனை, உடல்நலம் பேணுதலுக்கான ஆலோசனைகளை இயற்கை மருத்துவர்கள் ரத்தின பிரகாஷ், நிர்மலா,  சுஷா ஆகியோர் வழங்கினர்.

யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை சிகிச்சை முறைகளை கல்லூரி மாணவ, மாணவிகள் செயல்முறையில் விளக்கம் அளித்தனர். முகாமில், 200க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 5 =