தென்காசி அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம், புன்னையாபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. புன்னையாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி கண்ணன் முன்னிலையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்தி லதா, மரிய புஷ்பம், ராணி, தாமரைச்செல்வி, வட்டார வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் பியூலா ஆகியோர் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு  பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம், சுகாதாரமாக வாழ்வோம் என்ற வாசக பாதகைகளைக் கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். புன்னையாபுரம் ஊராட்சி செயலர் தங்கதுரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

99 − = 95