தென்காசியில் 6 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா

தென்காசி கீழ்பகுதி திருவள்ளுவர் சமுதாய மக்கள் வாழும் 23 வது வார்டு முப்புடாதி அம்மன் கோவில் தெரு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி 6 லட்சம் மதிப்பீட்டில் ஆள் துளை கிணறு மேல்நிலை நீர் தீர்க்கதொட்டி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகராட்சி சேர்மன் சாதிர் தலைமை வகித்து குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை திறந்து வைத்தார். தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர் துணை சேர்மன் சுப்பையா 23வது வார்டு கவுன்சிலர் சுனிதா ஆகியோர் முன்னிலை  வகித்தனர். இந் நிகழ்ச்சியில் ஆணையாளர் பாலமுருகன் பொறியாளர் கண்ணன் கவுன்சிலர்கள் பூமாதேவி,ரபிக்,சுப்பிரமணியன் காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர்  ஏஜிஎம். கணேசன் பொருளாளர் ஈஸ்வரன் துணைத் தலைவர் தேவராஜன் பிரேம் குமார்திமுக நிர்வாகிகள் ஷேக்பரீத் தங்கப்பாண்டியன்

சன் ராஜா ராஜேந்திரன் மைதீன் மதிமுக மாவட்ட அவை தலைவர் வெங்கடேஸ்வரன் கார்த்திக் திருவள்ளுவர் சமுதாய நிர்வாகிகள் சுப்பையா சுதர்சன் ராமச்சந்திரன் சிதம்பர ராஜா ராமலிங்கம் துரை கிருஷ்ண மூர்த்தி ரவி குமார் சபரிகணேஷ் மகாகாளிதாஸ் விவேக் ராஜா விக்னேஷ் வெங்கடேஷ் செல்வநாயகம் அரவிந்த் ஜோதிடர் சுரேஷ் கோபி கவாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முடிவில் காங்கிரஸ் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் அனைவருக்கும் நன்றி கூறினார்.