தென்காசியில் வரும் 13-ஆம் தேதி பா.ஜ.க பொதுக்கூட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வருகின்ற 13-ஆம் தேதி தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த இடத்தில் கொட்டகை கால் நடும் விழா மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன் பாலகணபதி, மகாராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், அருட்செல்வன், ராமநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி பிரிவு மாநிலச் செயலாளர் கோதை மாரியப்பன், தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், செயற்குழு உறுப்பினர்கள் பாண்டித்துரை, தீனதயாளன், நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள், மாவட்ட தலைவர்கள், முத்துக்குமார், பால்ராஜ் ,முருகன், மாரியப்பன், தர்மர், அருணாச்சலம், பண்டரிநாதன், ராம்குமார், சண்முகராஜ், ஊடகப்பிரிவு செந்தூர் பாண்டியன், கருப்பசாமி, பொன்லிங்கம், குத்தாலிங்கம், ரங்கராஜ், கேப்டன் குமார், ராதாகிருஷ்ணன், முத்துப்பாண்டி, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை  சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 − = 66