தென்காசியில் ரசாயன ஊசி செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அழிப்பு

தென்காசி மாவட்டம், குத்துக்கல் வலசை பகுதியில் உள்ள தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் இயற்கைக்கு மாறாக ரசாயன ஊசி செலுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் இதை பொதுமக்கள் உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் இணையம் வழியாக ஒரு நபர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில், தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிர மணியன் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையில் குத்துக்கல் வலசை பகுதியில் செயல்பட்டு வரும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின் போது அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தர்பூசணி பழங்கள் அனைத்தும் இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் ரசாயன ஊசி மூலம் பழுக்க வைக்கப் பட்டது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து, அந்த கடையில் இருந்த சுமார் 100 கிலோ தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அளித்தார், மேலும் தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் தண்ணீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உண்பது வழக்கம். அப்படி தண்ணீர் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை தேடி செல்லும் பொது மக்கள் முதலில் வாங்குவது தர்பூசணி பழங்கள்தன், அப்படி ஏராளமான பொதுமக்கள் விரும்பி உண்ணும் இந்த தர்பூசணி பழங்களிலே ரசாயன ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மேலும், இது போன்ற இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் அமிலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.