தென்காசியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா ஆட்சியர் தலைமையில்  நடைபெற்றது

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர்தெரிவித்ததாவது, தென்காசி மாவட்டத்தில் இன்றைய தினம் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ஏழு முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மின்கலம் பொருந்திய சக்கர நாற்காலிகள், மேலும் சிறப்பு பள்ளிகளில் கல்வி போதிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் தசை பயிற்சியாளர்களுக்கு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பாக பணி புரிந்தமைக்கான பாராட்டு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் தசை பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

96 − = 87