தென்காசியில் பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய  பேருந்து நிலையம் அருகில் மாவட்ட மகளிர் அணித் தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் வளர்மதி, பொருளாளர் மரகதம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பொருளாளர் பாலகிருஷ்ணன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், வழக்கறிஞர் முத்துலட்சுமி, ராதாகிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், பொன்னம்மாள், லட்சுமண பெருமாள், மாவட்ட ஊடகப்பிரிவு செந்தூர் பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம் மாவட்ட துணைத் தலைவி மாரியம்மாள், ஷீலா கணேஷ், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.