முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டிதென்காசி கீழ ரத வீதி காந்தி சிலை அருகில் மாவட்டத் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனி நாடார் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், வைகை குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம் கணேசன், காஜாமைதீன் வட்டாரத் தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர்கள் சபரி முருகேசன், கோவிந்தராஜுலு, கண்ணன், நகர துணைத் தலைவர்கள் தேவராஜன், சித்திக், செயலாளர் பீர் முகம்மது, பொருளாளர் ஈஸ்வரன், சிவாஜி மன்றம் கணேசன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபீக், சிறுபான்மை பிரிவு நகரத் தலைவர் சலீம்,ஏஎல்என்.ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.