குற்றாலம் பொதிகை என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தென்காசி இசக்கி மஹால் மைதானத்தில் ஈபிள் டவர் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.பொருட்காட்சியை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ.பத்மநாதன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் பொருட்காட்சி வளாகத்தில் உள்ள இயந்திர விலங்குகள் மற்றும் ராட்சத ராட்டினங்களை பார்வையிட்டார், இப் பொருட்காட்சி ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தினம்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடை பெறுகிறது. இப்பொருட்காட்சி வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான ஈபிள் டவர் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராட்சத கொரில்லா, யானை, ஒட்டகச்சிவிங்கி, டைனோசர் ,மான், காட்டெருமை ஆகிய இயந்திர மிருகங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் ராட்சத ராட்டினங்கள், வண்ண மீன் கண்காட்சி ,செல்பி பாயிண்ட், பனி உலகம், பேய் வீடு, மேஜிக் ஷோ மற்றும் வெளிநாட்டு பறவைகளின் சாகசங்கள் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு அழகுசுந்தரம் தலைமை வகித்தார், குற்றாலம் பேரூராட்சி கவுன்சிலர்கள் குமார் பாண்டியன், கிருஷ்ணராஜா, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், திமுக பிரமுகர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திவான் ஒலி, நகர செயலாளர் சாதிர், வழக்கறிஞர் வேலுச்சாமி ,பேரூர் திமுக செயலாளர்கள் சுடலை, சங்கர் என்ற குட்டி, முத்தையா, பண்டாரம், பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை , ஜீவானந்தம், ஆனந்தன் சுரேஷ், செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர், முடிவில் கனிராஜா நன்றி கூறினார்.