தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் இந்து தேசிய கட்சியின் தென்காசி மாவட்ட செயல் தலைவர் பிச்சுமணி தலைமையில் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அந்த மனுவில் ஏழை பாமர மக்கள் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தக் கூடிய பொருட்களான தொலைக்காட்சி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதன பெட்டி, அலைபேசி போன்ற பொருள்கள் அத்தியாவசிய பொருட்களாக கருதப்படுகின்றன. இதனை தனியார் நிதி நிறுவனங்களின் பூஜ்ஜியம் சதவீத வட்டியுடன் கூடிய கடன் தருவதாக அப்பாவி ஏழை மக்களை குறிவைத்து கடனுதவி வழங்குவது போன்று ஏமாற்றி பொது மக்களிடம் இருந்து காலதாமத வட்டி, அபராத வட்டி என்று கல்வி அறிவில்லாத அப்பாவி பாமர மக்களை மிரட்டி வசூல் செய்கின்றனர்.
மேலும் கடன் கட்ட முடியாத நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி சென்று அநாகரிகத்துடன் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். ஆகையினால் இதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு இந்த கோரிக்கை மனு மூலமாக தெரியப்படுத்துவதுடன் எந்தவித நடவடிக்கையாக இருந்தாலும் முன் அறிவிப்பு சுற்றறிக்கை மூலமாக நுகர்வோருக்கு தெரியப்படுத்தி மேற்படி நிதி நிறுவனங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இதனை தமிழக அரசு மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தனியார் நிதி நிறுவனங்கள் வரை முறைகளுக்கு உட்பட்டு செயல்பட அறிவுறுத்த வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை இந்து தேசிய கட்சி செயல் தலைவர் பிச்சுமணி தலைமையில் நிர்வாகிகள் பலரும் அளித்தனர்.