துப்பாக்கி சுடும் போட்டியில் புதுக்கோட்டை காவல்துறை வெற்றி எஸ் பி நேரில் அழைத்து பாராட்டு

மத்திய மண்டலம் சார்பில் சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி சார்பாக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சென்னை ஒத்திவாக்கத்தில் கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரையில் மாநில அளவில் நடைபெற்ற நடப்பு ஆண்டிற்கான துப்பாக்கி சுடும் போட்டியில் மத்திய மண்டலம் திருச்சி சார்பாக கலந்து கொண்ட புதுக்கோட்டை ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சுந்தரலிங்கம் பிஸ்டல் கை துப்பாக்கி பிரிவில் தங்கப்பதக்கம், நகர காவல் நிலைய தலைமை காவலர் ராஜாராம் அதே பிரிவில் வெண்கல பதக்கமும், வெள்ளனூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ரஞ்சித் குமார் யார்ட்ஸ் விரைவில் வெண்கல பதக்கமும் பெற்று மத்திய மண்டலம் சார்பாக துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றனர். அவர்களை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =