துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பெற்று வருவதை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது 11 வயது சிறுவன் புகழேந்தி என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவன் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனை பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சையின் விபரங்களை கேட்டறிந்தனர், பின்னர் மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நல உதவிகளையும் வழங்கினர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மாணவனுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஓரளவு குணமாகி வரும் நிலையில் இருக்கின்றார் என்றும் புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார், மேலும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு வீரர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளி விட்டும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, என்றும் தமிழக முதல்வர் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் அடிப்படையில் 95 சதவீதத்திற்கும் மேலாக விளையாட்டு வீரர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே அவர்களது பயணம் தொடர்கிறது என்று தெரிவித்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏ சந்திரசேகரன் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் அமைச்சருடன் நிர்வாகிகள் அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாலு, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மழையூர் ராமசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இதயம் அப்துல்லா, முள்ளூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 54 = 60