இந்திய திருநாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இந்தியா முழுவதும் சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்படுகின்ற வேளையில் தமிழக அரசு 3 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அதில் ஒரு மாவட்டமாக புதுக்கோட்டையை அறிவித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சத்தியமூர்த்தி நினைவை போற்றுகின்ற வகையில் தீரர்சத்தியமூர்த்தி பிறந்த திருமயத்தில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்து அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா, புதுக்கோட்டை பள்ளி துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளையம்மாள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாரதியார், திருமயம் வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரன், ஜேம்ஸ் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், முனியசாமி மற்றும் இருபால் பள்ளி ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
