விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரும்பட்டு கிராம பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய செயலாளருமான சந்திரசேகரன் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் சித்ராவிஜயன் கலந்துகொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் நித்யா, உதவி இயக்குனர் பொன்னம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் காலியம்மாள் வீராசாமி வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரங்கள் அழிந்து வருவதை குறித்து விழிப்புணர்வு பாடலை கலை நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன, கோலப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கி, சமத்துவ பொங்கல் உறுதிமொழி ஏற்கப்பட்டன,
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக்அலிபேக், நந்தகோபாலகிருஷ்ணன், பணிமேற்பார்வையாளர் குமார், கவுன்சிலர்கள் ஜெயராமன், வீராசாமி, இன்பவள்ளிஅய்யனார், ராஜீவிபழனிவேல், ஊராட்சி துணை தலைவர் ஏழுமலை, கிளை செயலாளர்கள் ஆறுமுகம், எடிசன், சந்தீப், குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தனிகைவேல் மற்றும் ஜெயரகு, பழனிவேல், சிவசங்கர், ஆனந்தி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.