திருவெண்ணெய்நல்லூரில்தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருவெண்ணெய்நல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அரசூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருவெண்ணைநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார், அவைத்தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத் தலைவரும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மணிக்கண்ணன் பேசினார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வேற்றுமை பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று ஏழை, எளிய மக்களுக்கும், மாணவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென செயல் வீரர்கள் கூட்டத்தில் மணிக்கண்ணன் தெரிவித்தார்.

கூட்டத்தில், ஒன்றிய பொருளாளர் மைக்கேல், ஒன்றிய துணை செயலாளர்கள் வீராசாமி, பிரபாவதி தாமோதரன், மாவட்ட பிரதிநிதிகள் தில்லைஇளம்வழுதி, சக்திவேல், ராஜேஷ்கண்ணா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியன், மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் காவியவேந்தன்,  இளைஞரணி அமைப்பாளர் ராஜா, தொண்டர்படை துணை அமைப்பாளர் ரவிபிரபாகரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 1 =