புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே சுமார் 750 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள 2000 ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த காசிக்கு வீசம் கூட என்று அழைக்கப்படும் திருவிடையார்பட்டி திரிபுரசுந்தரி சமேத திருமூலநாத திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா 750ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 28ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. கணபதி ஹோமம், கோ பூஜை,பூர்வாங்க பூஜைகள், தன பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் திருவரங்குளம் வைத்தீஸ்வரன் குருக்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல் கால பூஜையில் துவங்கி இன்று காலை 6.30 மணிக்கு ஆறாம் கால பூஜை செய்து அதனை தொடர்ந்து காலை 10 மணியளவில் ராஜகோபுரத்தை 5 கருடன்கள் வலம் வர கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்வில் வாண்டாகோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.



















