திருவள்ளூர் வடக்கு, மேற்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனைக் கூட்டம்: அன்புமணி பங்கேற்பு

திருவள்ளூர் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள தாட்சாயணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், பா.ம.க., மாநில இளைஞரணி தலைவரும், எம்.பி.,யுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க., கூட்டணி கட்சி அதிகளவில் வெற்றி பெறும். எனவே, தொண்டர்கள் எழுச்சியுடன் பணியாற்றுங்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், மேற்கு மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான தினேஷ்குமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி, ஒன்றிய தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பா.ம.க.,வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2