திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் யோகாவில் உலக சாதனை

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் – நவநீதம் தம்பதியின் மகன் ரவிகிருஷ்ணா (10). தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். ரவிகிருஷ்ணா தனது இரு கால்களுக்கு இடையே உடலை முன்னோக்கி வளைத்து பின்புறமாக தலையை மேல்நோக்கி பார்க்கும் பாத குண்டலாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் உலக சாதனை, இன்டர் நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் என 3 உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இவரது உலக சாதனையை அவரது பயிற்சியாளர் சந்தியா உள்பட அந்த பகுதி மக்கள் பலரும் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2