திருவள்ளுவர் திருநாள் புதுக்கோட்டையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

வள்ளுவப் பெருந்தகையின் திருநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை திருக்குறள் கழகம் சார்பில், சின்னப்பா பூங்காவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் ரா.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்குமாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

உலகத் திருக்குறள் பேரவை மாநில பொருளாளர் சீனு. சின்னப்பா,திருக்குறள் கழக தலைவர் க.ராமையா, செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கோவிந்தசாமி, சர்வசித் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ச.ராம்தாஸ், இளங்கோவடிகள் இலக்கியமன்ற பொருளாளர் சத்தியராம் ராமுக்கண்ணு, கம்பன் கழக செயலர் ரா.சம்பத், கவிஞர் தங்கம்மூர்த்தி,பேராசிரியர் விசுவநாதன் மற்றும் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு திருவள்ளுர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு செய்தனர்.நீதியரசர் தனது வாழ்த்து செய்தியில், “திருக்குறள் நமக்கு மட்டுமல்ல உலக மக்கள் அனைவருக்குமான பொது நூல். உலக மக்கள் அனைவருக்குமான ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் போன்று வேறு எதுவுமில்லை. இந்த திருவள்ளுவர் தினத்தில் வள்ளுவப்பெருந்தகையின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மாலை அணிவித்து மரியாதை செய்த இந்த நிகழ்வில் உங்களோடு கலந்துகொண்டதில் பேரு உவகை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − 47 =