கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களில் சமத்துவப் பொங்கல், பாரம்பரிய விளையாட்டு, சிறுதானிய உணவு தயாரிப்பு கண்காடசி ஆகிய முப்பெரும் விழா மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார், பொறியியல் கல்லூரியின் தாளாளர் ந.கனகராஜன், முதல்வர்கள் சரவண.திலகவதி, செ.கவிதா, இயக்குநர் மா.குமுதா, கவிஞர்கள் புதுகை வெற்றி வேலன், மு.பா ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் பாரம்பரிய சிறுதானிய உணவான கேழ்வரகு பார்பி, கேழ்வரகு லட்டு, திணைப் பொங்கல், திணை கருப்பட்டி பாயாசம், திணை கிச்சடி, திணைப் புட்டு, சிகப்பரிசி பொங்கல், குதிரை வாலி, கம்புக்கூழ், கவுனி பாயாசம், கவுனி பொங்கல், வரகரிசி பொங்கல், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு சிறுதானிய உணவு தயாரிப்பும், பானை உடைத்தல், மார்கழி பின்னல் கோலம் வரைதல், கும்மியடி, வட்டு எறிதல் போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டின் சமத்துவப் பொங்கலை போற்றும் வகையில் மாணவிகள் ஒன்று சேர்ந்து 23-மண் பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் சுப.தாரகேஸ்வரி வரவேற்றார், முடிவில் தமிழ்த்துறைத் தலைவர் நா.பூர்ணிமா நன்றி கூறினார்.