திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.பி.பெரிசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் எஸ்.சுப்பிரமணியன், வட்டா வளர்ச்சி அலுவலர் பழ.சிவகாமி, மேலாளர் கா.கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி கலந்துகொண்டு பணி ஓய்வுப் பெற்ற சுப்ரமணியன், தமிழ்ச்செல்வன், லீலா ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழக சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீரமுத்து, மாநில பொருளாளர் நாகராஜன், மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம், ஒன்றிய தலைவர்கள் தங்கமணி, குமார், ஒன்றிய செயலாளர்கள் நாகராஜன், ராஜேந்திரன் ஒன்றிய துணைத் தலைவர் துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.