திருவரங்குளம் அருகே விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி கிராமத்தில் வட்டார வேளாண்மை திட்டம், உழவர் நலத்துறை மற்றும் ஆத்மா தொழில்நுட்ப துறையின் மூலம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இக்கிராமம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி விவசாயிகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. உதவி இயக்குநர் (வேளாண்மை விதைச் சான்று) ஜெகதீஸ்வரி முன்னிலை வகித்தார்.

திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேல் கலந்து கொண்டு விவசாயிகள் அனைவரும் வரும் காலங்களில் ரசாயன உரங்களை படிப்படியாக குறைத்து இயற்கை விவசாயத்திற்கு மாறி பொதுமக்களுக்கு ரசாயன கலப்பு இல்லாத உணவு தானியங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம வேலை திட்டத்தில் வேப்பங்குடி கிராமம் தேர்வு செய்யப்பட்டு நூறு சதவீத வேளாண் திட்டங்கள் விவசாயிகளுக்கு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் வேளாண் அலுவலர் பிரபாகரன், ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன், உதவி மேலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் விவசாய திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். ஏராளமான பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

99 − 97 =