திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது முன்னதாக திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுரை அரங்குல நாதர் கோவிலில் இருந்து அம்பாளை சப்பரத்தில் எழுந்தருள செய்து பக்தர்கள் வானவேடிக்கை மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர், அம்பாளுக்கு வம்பன் நாள் ரோட்டில் வியாபாரிகள் பொதுமக்கள் சார்பில் வானவேடிக்கை, மேளதாளத்துடன் அர்ச்சனை செய்து வீரமாகாளி அம்பாளுக்கு வரவேற்பு அளித்தனர்.

வீரமாகாளியம்மன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்மாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மண்டகப் படிதாரர்கள் சார்பில் அபிஷேக ஆராதனை சிறப்பு வழிபாடுகள் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 11.4.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற உள்ளது, ஏற்பாடுகளை மாஞ்சான் விடுதி கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்து வருகின்றனர்.