கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் தேசிய குடிமையியல் பணிகள் தின கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். தாளாளர் என்.கனகராஜன், கல்லூரியின் முதல்வர் சரவண திலகவதி, நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கை தனி வட்டாச்சியர் (தேர்தல்) அ.சோனைக் கருப்பையா தொடங்கிவைத்து பேசியதாவது, “போட்டித் தேர்வுகள் இன்றி இனி எந்த அரசுப் பணிக்கும் பொக இயலாது, அரசு வேலை என்பது ஒரு நிரந்தர ஊதியத்தையும். பணிப்பாதுகாப்பையும் வழங்கக்கூடியது. அதை அடைவதற்கு முதலில் கால நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். அடுத்து போட்டித் தேர்வுகள் எழுத ஆசைபப்டுவர்கள் முதலில் தனக்குள் ஏற்படும் பயத்தைப் போக்க வேண்டும். பயமே முதல் எதிரியாகும். நம்மால் முடியும் என்ற நேர்மறைச் சிந்தனை ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். “எண்ணுவதை உயர்வாக எண்ண வேண்டும் என்றார், அப்துல் கலாம். அந்த உயர்வான எண்ணத்தை நிறைவேற்ற தொடர் முயற்சி வெற்றியை பெற்றுத் தரும் என்றார்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பெ.வேல்முருகன் பேசியதாவது, தற்சமயம் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால், வருமானவரித்துறை, கலால் போன்ற 7,500பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும், இத்தேர்வுற்கு விண்ணப்பிக்க கடைசி 3-5-2023 ஆகும். இத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் வங்கிப் பணியிடங்கள் ஐவிபிஎஸ் தேர்வு மூலமும். ரயில்வே தேர்வு வாரியம் ஆர்.ஆர்.ரி.மூலம் ரயில்வே பணியிடங்களும் நிரப்பப்படுகிறது இது போன்றவற்றை நீங்கள் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற மாணவர்களுக்கு தேவையான விஷயங்கள் நாளிதழ், தொலைக்காட்சி மூலமாக அறிவிப்பு வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது, அதை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றார்.
வாசகர் பேரவையின் செயலர் சா.விஸ்வநாதன் வினாடி-வினாப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து தேசிய குடிமைப்பணிகள் தினம் ஏப்ரல்-21-இல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் குறிப்பாக ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். அதிகாரிகளாக பணியாற்றக் கூடியவர்களின் சிறந்த பணிகளை அதிகரிப்பதும், அதிகாரிகள் தங்களை மேலும் செலுமைப்படுத்திக் கொள்வதற்கான தினமாகவும் இது கடைப்பிடிக்கப்படுகிறது என்றார், நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரியின் மாணவிகள் பி.ஹர்சிதா வரவேற்றார், முடிவில் கே.காவியா நன்றி கூறினார்.