புதுக்கோட்டை திருவப்பூரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மாசிபெருந்திருவிழாவின் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.

கோவிலில் பக்தர்கள் பால்குடத்துடன் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

வழக்கம் போல இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக இன்று பொங்கல் விழாவும், நாளை 13-ஆம் தேதி (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெறுகிறது.

இன்று நடந்த பொங்கல் விழாவையொட்டி அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு மேளதாளத்துடன் பால்குடம், கரும்பு குழந்தை தொட்டில், அக்கினிச்சட்டி மற்றும் அலகு குத்தியும் பொங்கல் வைத்தும், தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இதையொட்டி முத்துமாரியம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் பக்தர்கள் பால்குடத்துடன் சுமார் 2மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்கப்படது.

மேலும், கோயிலைச் சுற்றி அமைக்கப்பட்ட பந்தல்களில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதில் நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

நாளை திங்கட்கிழமை இக்கோயில் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டநிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
படங்கள்: டீலக்ஸ் ஞானசேகர்