திருவப்பூர் மாரியம்மன் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்

திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி வழங்கினார்.

புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள திருக்கோயில்களில் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட சிப்பந்திகள் பணிப்பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு 1 ½ இன்ச் அகலத்தில் மயில்கண் பார்டர் பருத்தி வேஷ்டி மற்றும் பெண் பூசாரி, பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு ப்ரௌன் நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டையும் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 162 அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளும், 361 திருக்கோயில் ஆண் பணியாளர்களும், 55 திருக்கோயில் பெண் பணியாளர்களும் உள்ளனர். இதில் முதற்கட்டமாக புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 50 பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, அறநிலையத்துறை உதவி ஆணையர் ரா.சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, செயல் அலுவலர் சரவணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 63 =