திருவண்ணாமலை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித் தொகை குறித்து சிறப்பு முகாம்

திருவண்ணாமலை  மாவட்டம்,வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூர் உள்வட்டம்,வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் உத்தரவின் பேரில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித் தொகை குறித்து விளக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் வெம்பாக்கம் வட்டாட்சியர், குமரவேல், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்  ஜெயவேல், வருவாய் ஆய்வாளர்  மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் பழனி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்,பெருங்கட்டூர் ஊராட்சி மன்ற தலைவர்,தென்கழனி ஊராட்சி மன்ற தலைவர், மற்றும் பொதுமக்கள் சுமார் 300 நபர்களுக்கு மேல் சிறப்பு முகாமில் கலந்து கொண்டனர். மேலும் முகாமில் குத்தனூர் கிராமத்தை சேர்ந்த நந்தினி தகப்பனார்  சுந்தரமூர்த்தி எனும் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறும் ஆணையை சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் வழங்கினார். இந்த சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இம்முகாமில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.