திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் நடைபெற்றது.
2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான “மகா தீபம்” ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு “அண்ணாமலையாருக்கு அரோகரா”என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர். செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடா துணியிலான திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில், பழனி முருகன் கோவில், திருத்தணி முருகன் கோவில், விராலிமலை முருகன் கோவில், குமாரமலை முருகன் கோவில் உள்ளிட்ட தலங்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது.