திருவண்ணாமலையில் டிச.,6ல் கார்த்திகை தீப விழா; சிறப்பு பஸ்கள் ஏற்பாடு, பாதுகாப்பு தீவிரம்!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கானோர் வருவார்கள். ஆகையால், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டாக கார்த்திகை தீபம் நடைபெறவில்லை. இந்தாண்டு டிசம்பர் 6ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. 7ம் தேதி பவுர்ணமியாகும். 2 சிறப்பு நாட்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

டிச.,6ம் தேதி காலை 6 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படுவதை பார்க்க மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.

இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மேலும், திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், ஆரணி, செஞ்சி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3,000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

சிறப்பு பஸ்கள் டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்து வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுளுக்கு தற்போதே போலீஸார் தயாராகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =