திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நியூ லுக்’ புகைப்படங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனின் “நியூ லுக்” புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் வரும் 17ஆம் தேதி தமது 59-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

 இந்நிலையில், புதிய சிகை அலங்காரம் மற்றும் கோர்ட், சூட் அணிந்து புதிய தோற்றத்தில் அவர் போட்டோஷூட்டில் பங்கேற்றார். அவரை விதவிதமாக புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞர் குணசீலன் ராமையா, தமது ஃபேஸ்புக் பக்கத்தில், திருமாவளவனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்னதாக போட்டோஷூட் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.