திருமானூரில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

திருமானூரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கடத்தல் மற்றும் வணிக ரீதியான பாலியல் சுரண்டல் பற்றிய சட்ட கல்வி அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான என். அழகேசன், திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ். மணிமாறன் வரவேற்று பேசினார்.

திருமானூர் பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள், தங்களது குடும்பம் மற்றும் வருவாய் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். மகாலட்சுமி சிறப்புரையாற்றினார், அரியலூர் வழக்கறிஞர் சங்கச் செயலாளர்  முத்துக்குமரன், அரசு வழக்கறிஞர் தேவேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு உள்ளிட்டோர் பேசினர், விழாவில் திருமானூர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாகி வெள்ளைச்சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் திருமானூர் ஊராட்சி மன்றச் செயலாளர் ஆர். சங்கர் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 32 = 35