திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் வாசகர் வட்டம் நடத்தும் கோடை திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தீரர் சத்தியமூர்த்தி கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் கோடைத் திருவிழா வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் நூலக செயலாளர் மாலதி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் ரிஷி,எஸ் கஞ்சக்சன் ஸ்டீபன், லீ.ஏ.எஸ்.ஜே காம்ப்ளக்ஸ் உரிமையாளர் சுரேஷ்,கணக்கியல் அலுவலர் சரவண பெருமாள்,மண்டல அலுவலகம் சேலம்,

திருமயம் அகில்கரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் எய்ம்ஸ் அறக்கட்டளை தலைவர் சைமன்,மேலும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த தாமரவயல் ஆயகட்டு தலைவர் வாசகர், வட்ட துணைத் தலைவர் பிரபு மற்றும் இந்தியன் அகத்திய அமைப்பின் மாணவ மாணவியரின் சிலம்பத் தனித்திறன் நிகழ்ச்சி நூலக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவியருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் சிறப்பு விருந்தினர்கள் வாசகர் வட்டம் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கலிவரதன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரத்தினம், வீரப்பட்டி பழனிச்சாமி, மேலூர் சுப்பிரமணி, வெள்ளைச்சாமி மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.விழா முடிவில் நூலகர் ராதா லட்சுமி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 30 = 40