திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முத்துராமு வரவேற்றுப் பேசினார், தாளாளர் பிச்சப்பா மணிகண்டன், செயலர் விஸ்வநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் பிச்சப்பா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் என்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது , ஒழுக்கம் நிறைந்த கல்விதான் ஒரு மனிதனை உயர்த்தும். எவ்வளவு பட்டங்கள் பெறுகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு ஒழுக்கம் நிறைந்த மனிதராக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும், மூத்தோருக்கும் மரியாதை கொடுங்கள், பணிவுடன் நடந்து கொள்ளுங்கள், அந்தப் பணிவு நிறைந்த பண்பு உங்களை பல மடங்கு உயர்த்தும், நேர்மையும், உழைப்பும் மட்டுமே ஒருவரை உயர்த்தும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் துறைத்தலைவர் சொர்ணலதா நன்றி கூறினார். இவ்விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசியர்கள் மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.