திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறைத்தலைவர் கவிதா வரவேற்றார், கல்லூரி முதல்வர் முத்துராமு தலைமையேற்றுப்பேசினார். சிறப்பு விருந்தினரை கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறை மன்றச்செயலாளர் கார்த்திகா அறிமுகம் செய்துவைத்தார். திருச்சிராப்பள்ளி தேசிய தொழில் நுட்பக்கழககணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் மைக்கேல் ஆரோக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது ,
இன்றைய உலகத்தை தொழில் நுட்பம் தான் ஆளுமை செய்கிறது, எனவே தொழில் நுட்பம் சார்ந்த அறிவினை ஒவ்வொரு மாணவரும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒருதனித்திறமைகள் உண்டு அந்தத்தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மென் மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும். இது போன்ற கருத்தரங்குகளில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வேண்டும். இப்போட்டிகளில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. கலந்துகொள்வதே ஒருவகை வெற்றிதான். காலத்தின் போக்குகளை கணித்து அதற்கேற்ப அத்துறை சார்ந்த நவீன தொழில் நுட்ப அறிவினைப்பெருக்கிக்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர்பேசினார்.
இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பல்வேறு தொழில் நுட்பம் மற்றும் திறனறிப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்ட பொறியியல் கல்லூரிகளைச்சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவாக துறையின் மன்றச்செயலாளர் தனம் நன்றி உரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரி மாணவர்கள், பேராசியர்கள், துறைத்தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.