திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் 74-ம் ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முத்துராமு வரவேற்றார், செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்துப் பேசினார்.
தாளாளர் பிச்சப்பா மணிகண்டன் தேசியக் கொடி ஏற்றி வைத்து குடியரசு தின விழா உரை நிகழ்த்தினார், நிறைவாக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைத் தலைவர் சொர்ணலதா நன்றி கூறினார், இவ்விழாவில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அனைத்துப் பணியாளர்கள் மற்றும் மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.