திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்

திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது, விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் மின்னியல் மற்றும் மின்னணுவியல்  பொறியியல் துறைத் தலைவர்  வரதராஜன் வரவேற்றார்,  கல்லூரி  முதல்வர்  முத்துராமு தலைமை வகித்துப் பேசினார், சிறப்பு விருந்தினராக ‘யோசி’மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கவி.முருகபாரதி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது ,

மற்ற தொழில்களைப்போல் பணியாற்றக்கூடியதல்ல ஆசிரியர் பணி, ஏனெனில் மற்ற பணிகளில் எல்லாம் நாம் செய்யும் வேலையினைப் பொறுத்தே அதற்கான முடிவுகள் தெரியும், ஆனால் ஆசிரியப் பணியில் மட்டும்தான், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்து ஆசிரியர்களுக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்.

வகுப்பறையில் கற்றுக் கொடுப்பவர்கள் மட்டுமே ஆசிரியர்கள் அல்லர், வாழ்க்கை முழுவதும் நமக்கு ஒவ்வொரு விஷயங்களையும் கற்றுத் தரும் அனைவருமே ஆசிரியர்கள்தான், அப்படிப்பட்ட மாண்புக்குரிய ஆசிரியர்களை மதிப்பவர்கள் எப்போதும் வாழ்க்கையில் உயர்வு அடைவார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை, இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியில் நீண்ட காலம் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு  கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர், நிறைவாக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைத் தலைவர் சொர்ணலதா நன்றி கூறினார்,  விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் , மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − = 72