புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் கானாடு 108 மருத்துவ சமுதாயத்தினர் சார்பில், திருமயம் ஸ்ரீ இந்திர முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து கேரளா செண்டிமேளம் முழங்க வான வேடிக்கைகளுடன் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பூ கொண்டு செல்லப்பட்டது.
அலங்கார ரத்தத்தில் கொண்டு செல்லப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. மேலும் 108 கிராமங்களில் இருந்து மின் அலங்கார ரதத்தில் புஷ்பங்கள் வந்தது. இதில் தாரை தப்பட்டைகள் முழங்க திரளான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து சென்றனர். விழாவிற்கு திருமயம் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.