
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வீராச்சிலையில் பெரி.மெய்யப்ப செட்டியார் நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி செய்யும் முதலீடு என்ற தலைப்பில் பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக பள்ளியில் இருந்து தேக்கு, செம்மரம், பலா புங்கை மனக்கன்றுகள் மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
மரம் வளர்ப்போம் முறையை கற்றுக் கொடுத்தாலும் பிற்காலத்தில் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கும் உதவிடும் வகையில் வழிவகை செய்து வருகின்றனர். மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டு முதலாம் வகுப்பு படிக்கும் 17 குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பள்ளிச் செயலர் திரு.பெரி மெய்யப்பன் வருகை புரிந்து மரக்கன்றுகளை மாணவன் மாணவர்களுக்கு வழங்கினார் சிறப்புரை ஆற்றினார், இந்த ஆண்டின் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒருவருக்கு 1கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முகேஷ் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன சிவகுமார் மற்றும் ஆசிரியர்கள் மீனாட்சி எனபலர் கலந்து கொண்டனர்.