புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணை செயலாளர் ஜெகதீஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. தமிழக அரசே, தமிழக அரசே ரத்து செய், ரத்து செய் அரசு ஊழியர்களின் ஓய்வு காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய் எனவும் அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து எனவும் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனே வழங்கிடு எனவும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கிடு எனவும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்கிடு எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் முழங்கின. ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக சங்க ஊழியர்கள் 33 பேர் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் ஆறு பேர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தினர். ஆர்ப்பாட்ட முடிவில் வட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.