புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், சந்தைப்பேட்டையில் உள்ள மாதா மக்கள் மன்றத்தில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஜெர்மனியில் நான்காண்டு காலம் படித்து பயின்ற மருத்துவர் என். நாகரத்தினம். இவர் பெண்களுக்கான சிறப்பு மருத்துவர். பெண்களுக்கான குழந்தையின்மை, நீர்க்கட்டி உபாதைகள், அதிக இரத்தப்போக்கு, மாதவிடாய் கோளாறுகள், ஹார்மோன் குறைபாடுகள், உடல் பருமன் மற்றும் தைராய்டு பற்றிய ஆலோசனை மற்றும் சிகிச்சையும் ஆண்களுக்கான விந்து பரிசோதனை இவை அனைத்திற்கும் ஆலோசனை வழங்கி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் 1500 ரூபாய் மதிப்புள்ள பெண்களுக்கான ஸ்கேன், ஹீமோகுளோபின் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் மருத்துவர் கே. அருணாச்சலம், பி.ஆர்.ஓ சூரிய பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர், எய்ம்ஸ் அறக்கட்டளை தலைவர் எம் .சைமன், விவசாய பிரிவு தலைவர் குழந்தை ராஜ் மற்றும் ரத்னா மருத்துவமனை செவிலியர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பான பணிசெய்தனர். முகாமில் 112 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பரிசோதனைக்கு வந்த பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த முகாமில் கலந்து கொண்ட பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.