திருமங்கலத்தில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு , திருமங்கலம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பணி புரியும் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள், அரசின் கவனத்தை ஈர்க்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நியாயவிலை கடைக்கு மக்களுக்கு வழங்கக்கூடிய பொருட்களின் எடை சரியாக எடை போட்டு அனுப்பவும், தனித்துறை அமைக்க கோரியும், 10 ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்பினர், இப்போராட்டத்தில் மதுரை மாவட்ட நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கச் செயலாளர் செல்லதுரை மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.