திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் சரோஜா. க/பெ. நாச்சிமுத்து (50),  பூங்கொடி க/பெ. கோவிந்தராஜன் (48). கிட்டுசாமி, த/பெ.நாச்சி (45) மற்றும் தமிழரசி த/பெ.குணசேகரன் (17) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை உடனடியாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி, த/பெ.குமரன் (50), வளர்மதி க/பெ.சுதாகரன்(26), இந்துமதி, க/பெ.குணசேகரன் (23) மற்றும் காயத்ரி, த/பெ.சரவணன் (12) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படு காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

93 − = 86