நாகை மாவட்டம் திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் டாக்டர் ஜன்னத்திடம், நேற்று இரவு நேர பணியின் போது, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் ஹிஜாப் அணிந்து பணி செய்யக்கூடாது எனவும், ஹிஜாபை கழற்றிவிட்டு பணி செய்ய வேண்டும் எனவும் மிரட்டியதோடு, அனுமதியின்றி பெண் மருத்துவரை வீடியோ எடுத்துள்ளார். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இரவுநேர பணியின் போது பெண் மருத்துவரை மததுவேஷத்துடன் மிரட்டிய பாஜக நிர்வாகி மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலங்களைப் போன்று தமிழகத்திலும் மதவெறுப்பு நடவடிக்கையில் ஈடுபடும், மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் இத்தகையவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவுநேர பணியில் ஈடுபடும் பெண்களுக்கு இதுபோன்ற சமூக விரோதிகளால் பாதுகாப்பற்றச் சூழலை ஏற்படுவதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு, தமிழக அரசு போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.