திருந்தி வாழும் மாவோயிஸ்ட் பெண்ணுக்கு தமிழக அரசு சார்பில் ஆவின் அங்காடி வழங்கல்

முதியோர் இல்லத்தில் வாழும் மனம் திருந்திய மாவோயிஸ்ட் இயக்க பெண்ணிற்கு தமிழக அரசின் சார்பில் 2.50 லட்சம் மதிப்பில் ஆவின் அங்காடி வழங்கி அதை வேலூர் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் காவல் துறையிடம் சரணடைந்து மனம் திருந்தி அரியூரில் (ஸ்ரீ சாய் தஞ்சம்) முதியோர் இல்லத்தில் வாழும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த பிரபா என்கிற சந்தியா என்ற பெண்ணுக்கு தமிழக அரசின் மூலம் வேலூர் மாவட்டம் அரியூர் மலைக்கொடி ஸ்ரீபுரம் தங்கக்கோயில் செல்லும் சாலையில் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான ஆவின் நிறுவன தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை க்யூ பிரிவு குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 4 = 9