திருநாவலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநாவலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் களமருதூர் கிராமத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திருநாவலூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், வேளாண்மை ஆத்ம குழுத் தலைவருமான கேவி முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னிலையில் ,சிறப்பு அழைப்பாளராக, தலைமை திமுக பேச்சாளர் கந்திலி கரிகாலன் கலந்துகொண்டு தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகதீசன், ஒன்றிய குழுத்தலைவர் சாந்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரமூர்த்தி, மணிகண்டன், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன், களமருதூர் ஒன்றிய குழு உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய அவைத் தலைவர் சக்திவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வீரப்பன், அம்மாசி, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், திலகராஜ், சேதுபதி, சிவக்குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம், கிளை திமுக செயலாளர்கள் கோவிந்தன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.